Karnataka | பலூனால் பயங்கர விபத்து.. துடிதுடித்து பிரிந்த உயிர் - கிறிஸ்துமஸ் நாளில் துயரச் சம்பவம்
மைசூரு அரண்மனை அருகே எரிவாயு பலூன் வெடித்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, அரண்மனை நுழைவாயில் அருகே விற்பனைக்காக வைத்திருந்த அலங்கார பலூன்களில் திடீரென ஏற்பட்ட வெடிப்பால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.