உணவு உற்பத்தியாளர்களின் வருமானம் அதிகரித்துள்ளது'' பிரதமர் மோடி பெருமிதம்
உணவு உற்பத்தியாளர்கள் தங்களது பயிர்களுக்கு நியாயமான விலை பெறுவது மட்டுமல்லாமல், அவர்களின் வருமானமும் அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகும் நிலையில் பிரதமர் மோடி அத்திட்டம் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் நலனுக்காக பாஜக பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டின் உணவு உற்பத்தியாளர்கள் தங்கள் பயிர்களுக்கு நியாயமான விலையைப் பெறுவது மட்டுமல்லாமல், அவர்களின் வருமானமும் அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.