புரட்டிப்போட்ட வெள்ளம் | பஞ்சாப் செல்லும் பிரதமர் மோடி

Update: 2025-09-07 14:56 GMT

செப்.9ஆம் தேதி பஞ்சாப் செல்லும் பிரதமர் மோடி

கனமழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு பயணிக்க உள்ளார். இதனை பஞ்சாப் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் அனில் சரின் உறுதிப்படுத்தி உள்ளார். சனிக்கிழமை வரை பஞ்சாப் மாநிலத்தில் கனமழைக்கு 46 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு லட்சக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான பயிர்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்