Navy | Police | போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் - கடற்படை அதிகாரி கைது
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் நடத்தியதாக கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் கைது செய்யப்பட்டார். கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டர் பதவியில் உள்ள ராகுல் கிருஷ்ணன், மால்காபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பாதையில் வந்துள்ளார். இதைத் தட்டிக் கேட்ட போக்குவரத்து காவலரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ராகுல் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.