ஈவ் டீசிங்- இருவரை காலில் சுட்டுப்பிடித்த காவல்துறை

Update: 2025-09-02 11:22 GMT

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஈவ் டீசிங் செய்த இருவரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். உத்தர பிரதேச மாநிலம் குஷி நகர் பகுதியை சேர்ந்த அஸ்லாம் மற்றும் சுல்ஃவிகர் ஆகியோர் பள்ளி, கல்லூரி முன்பு நின்றுகொண்டு மாணவிகளிடம் ஈவ் டீசிங் செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், அவர்களை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். முன்னதாக இருவரது தலைக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்