DELHI | போலீசாரை சுட்டு தப்ப முயன்ற கொலைக் குற்றவாளி, என்கவுன்ட்டர் செய்து பிடித்த டெல்லி போலீசார்
டெல்லி துவாரகாவில் போலீசார் குற்றவாளி ஒருவரை சுட்டுப் பிடித்தனர்... கடந்த மாதம், நஜாஃப்கரில் ரோஹித் லம்பா என்ற நபரை 4 பேர் சுட்டுக் கொன்றனர். ஹிமான்சு பாவ் தலைமையிலான கும்பல் இதற்கு பின்னால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய அங்கித் மற்றும் தீபக் ஆகியோர் தப்பி ஓடிய நிலையில், நஜாப்கரில் உள்ள சாய்பாபா கோயில் அருகே அங்கீத் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்படி போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கீத் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்ப முயன்ற நிலையில், என்கவுன்ட்டர் செய்து அங்கீத்தை சுட்டுப் பிடித்தனர்.