Cuttack Riot | தர்கா பஜாரில் VHP செய்த செயல் - கட்டாக்கில் வெடித்த கலவரம்.. 25 பேருக்கு நேர்ந்த கதி
ஒடிசாவில் வன்முறை... 8 போலீசார் உட்பட 25 பேர் காயம்
ஒடிசாவுல வி.எச்.பி பேரணியில ஏற்பட்ட வன்முறையால, 24 மணி நேரத்துக்கு இணைய சேவை தடை செய்யப்பட்டிருக்கு... ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தின் தெபிகரா பகுதியில் அமைந்துள்ள நதிக்கறை பகுதியில் துர்க்கை சிலை கரைப்பு நிகழ்வு நடைபெற்றது... இதனை, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தலைமையேற்று நடத்தியது. அப்போது தர்கா பஜார் தெரு வழியாக துர்க்கை சிலையுடன், இந்து பாடல்களை அதிக ஒலியுடன் வைத்து ஊர்வலம் சென்றதாக கூறப்படுகிறது... இது அங்கு வசித்து வந்த மற்றொரு தரப்பு மக்களுக்கு தொந்தரவாக அமைய, சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளனர். இதற்கு ஊர்வல தரப்பினர் மறுப்ப தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு தகராறு ஏற்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில்தான், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தர்க்கா பஜார் பகுதியில் இரு சக்கர வாகன பேரணி நடத்தியுள்ளனர். இதனை தடுத்த நிறுத்த போலீசார் வந்த நிலையில், கூட்டத்தினர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியுள்ளனர். கௌரிசங்கர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், இரு சக்கர வாகனங்களுக்கு விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தில், 8 போலீசார் உட்பட 25 பேர் காயமடைந்தனர்... அப்பகுதி முழுவதும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்டாக் மாவட்டத்தில் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது.