குக்கரில் கொதித்த மனைவி.. ஏரியில் மிதந்த `எலும்பு’ பொடி - சைக்கோத்தனத்தின் உச்சம்
குக்கரில் கொதித்த மனைவி.. ஏரியில் மிதந்த `எலும்பு’ பொடி - சைக்கோத்தனத்தின் உச்சம்
ஐதராபாத்தில் தன் மனைவியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி குக்கரில் கொதிக்க வைத்த கணவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த தண்டுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த குருமூர்த்தி முன்னாள் ராணுவ வீரர். இவர் இப்போது காவலாளியாக பணியாற்றி வரும் நிலையில் தனது மனைவி வெங்கட மாதவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு சண்டையிட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து மாதவியைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக பல பாகங்களாக வெட்டி, குக்கரில் வேக வைத்து எலும்பைப் பொடி செய்து ஏரியில் வீசியுள்ளார். இதையடுத்து போலீசார் குருமூர்த்தியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்