Bus Driver | ஓடும் பேருந்தில் திடீரென துடித்த 10 மாத குழந்தை.. கடவுளாய் வந்த டிரைவர், கண்டக்டர்
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் தொலைதூர பேருந்தில் பயணம் செய்த 10 மாத குழந்தைக்கு திடீரன வலிப்பு ஏற்பட்டதை அடுத்து, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் துரிதமாக செயல்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தையை காப்பாற்றி உள்ளனர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை, சிகிச்சைக்குப் பிறகு நலமாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.