Uttraprdesh | கண்முன்னே உயிருக்கு போராடிய நபர்.. சுற்றி நின்று மக்கள் செய்த செயலால் பேரதிர்ச்சி
உத்தரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள செக்டர் - 150 இடைப்பட்ட பகுதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வடிகாலுக்குள் விழுந்து மூழ்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்துள்ளவர் அதே பகுதியில் வசிக்கும் 27 வயதான மின் பொறியாளர் யுவராஜ் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், மூழ்கிய காருக்குள் சிக்கிய தனது மகன் இரண்டு மணி நேரம் உயிருக்கு போராடியதாகவும், உதவி கேட்டு அவர் கூச்சலிட்ட நிலையில், வீடியோ எடுப்பதிலேயே ஆர்வம் காட்டிய மக்கள் அவருக்கு உதவ முன்வரவில்லை என உயிரிழந்தவரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.