Central Government Employees | சூப்பர் மாற்றம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்
மத்திய பணியாளர் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறையானது சிவில் சேவை விதிகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதன்படி 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றாலும், முழு ஓய்வூதிய பலன்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் முழு பயன் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பின்னரே வழங்கப்படும என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வைத் தேர்வு செய்யும் ஊழியர்களுக்கு விகிதாசார அடிப்படையில் உறுதிசெய்யப்பட்ட ஊதியம் பெற உரிமை உள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.