Bihar | Train Crash | திடீரென தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்த சரக்கு ரயில் பெட்டிகள் - கோர காட்சி
பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயிலின் பாதிக்கும் மேற்பட்ட பெட்டிகள் ஆற்றில் விழுந்தன. சீரமைக்க 24 மணி நேரத்திற்கு மேல் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமைக்குப் பிறகே இயல்பு நிலை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.