Bus Fire Accident | 13 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்தில் திடீர் தீ - அலறிய பயணிகள் - பகீர் வீடியோ

Update: 2026-01-13 03:31 GMT

புதுச்சேரியில், சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 13 பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கிச் சென்ற போது, 100 அடி சாலையில் உள்ள இந்த விபத்து நேர்ந்துள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர், பேருந்தை சாலையோரம் நிறுத்திய நிலையில், பயணிகள் அனைவரும் கீழே இறங்கி உயிர்தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பேருந்து முற்றிலும் எரிந்த நிலையில், பயணிகளின் உடமைகளும் தீக்கிரையாகின.

Tags:    

மேலும் செய்திகள்