தனியார் மருத்துவமனையில் இளம்பெண் வரவேற்பாளர் மீது தாக்குதல்
மகாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளம் பெண் வரவேற்பாளர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மதுபோதையில் வந்த கோகுல் ஜா என்பவர் அனுமதியின்றி மருத்துவர் அறைக்குள் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரை தடுத்த பெண் வரவேற்பாளரை கோகுல் ஜா தாக்கியதுடன், அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கோகுல் ஜாவை கைது செய்தனர்.