அசுர வேகத்தில் நேருக்கு நேர் மோதிய பைக்.. வெளியான அதிர்ச்சி வீடியோ | Bike Accident
கேரளாவில் விபத்தை ஏற்படுத்திய பைக் ஓட்டுநரை போலிசார் கைது செய்தனர். மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காவல் நிலையம் அருகே கடந்த மாதம் கோபாலகிருஷ்ணன் என்பவர் ஸ்கூட்டர் ஒட்டி வந்தபோது அதே பாதையில் வந்த இருவர் அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்து கோபாலகிருஷ்ணன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவியை ஆராய்ந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய நபர்கள் மீது வழக்கு பதுவு செய்து தேடி வந்த நிலையில் இருவரையும், திருச்சூரில் கைது செய்தனர்.