Bhavana | நடிகை பாவனா `அந்த’ முடிவை எடுத்தாரா? - பெரும் பரபரப்பான கேரளம்
கேரள சட்டமன்ற தேர்தலில் நடிகை பாவனா போட்டியா?
வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக நடிகை பாவனா போட்டியிட போவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இதனை நடிகை பாவனா மறுத்துள்ளார்.
அனோமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பாவனா, யார் இப்படி எல்லாம் ஒரு கதையை உருவாக்கி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் இந்த செய்தியில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.