பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் சிறப்பு தந்திரப் படை மேற்கொண்ட தாக்குதலில் 12 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. போலான் மற்றும் கெச் மாவட்டங்களில் மேற்கொண்ட இரண்டு தனித்தனி தாக்குதல்களில் மொத்தமாக 14 ராணுவ வீரர்கள் பலியானதாகவும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ள நிலையில், இதன் உண்மைத் தன்மையை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.