இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருப்பதாக கூறிய அவர், கமல்ஹாசனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார். மேலும், அன்னை தமிழ் தான் அகில உலகின் மூத்த மொழி என்றும், மொழி குறித்து தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.