உத்தரப் பிரதேச மாநிலத்தில், முதியவரை காளை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில், முதியவர் ஒருவர் சாலையைக் கடப்பதற்காக நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே வந்த காளைமாடு, திடீரென முதியவரை தனது கூர்மையான கொம்புகளால் அலேக்காக தூக்கி சாலையில் வீசியது. நிலைகுலைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.