Amitshah in bihar temple || பிரமாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிய `அமித்ஷா'

Update: 2025-08-09 02:58 GMT

Amitshah in bihar temple || பிரமாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிய `அமித்ஷா'

பீகாரில் சீதாதேவிக்கு பிரமாண்ட ஆலயம் அமைக்க, உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நட்டார். அயோத்தியாவில் ராமருக்கு ஆலயம் அமைக்கப்பட்டது போல, பீகார் மாநிலத்தில் ராமரின் மனைவி சீதாதேவிக்கு ஆலயம் அமைக்கப்பட உள்ளது. மாநிலத் தலைநகரிலிருந்து 140 கி.மீ வடக்கே சீதாமர்ஹி மாவட்டத்தில் புனௌரா தாம் பகுதி அமைந்துள்ளது. சீதாவின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கு, அவருக்கு ஆலயம் கட்ட அடிக்கல் நடப்பட்டது. இதற்கு அம்மாநில அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்த நிலையில், சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூபாய் எழுநூற்று இருபத்தி எட்டு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்