திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பட்டு வஸ்திரத்தில், 50 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் விஐபி-க்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில், பட்டு வஸ்திரம் போர்த்தி மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பட்டு வஸ்திரங்களை டெண்டர் மூலம் தேவஸ்தானம் கொள்முதல் செய்து வந்தது.
ஆனால் டெண்டர் எடுத்த நபர்களுடன் தேவஸ்தான கொள்முதல் துறையினர் கூட்டு சேர்ந்து, தூய மல்பரி பட்டுக்கு பதிலாக 100% பாலிஸ்டர் மூலம் நெய்யப்பட்ட வஸ்திரங்களை கொள்முதல் செய்ததாக கூறப்படுகிறது.
இதன்மூலம் வெறும் 300 ரூபாய் மதிப்புள்ள வஸ்திரங்களை, கூரைப்பட்டு வஸ்திரங்கள் என்று கொள்முதல் செய்து, 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றது அம்பலமாகி இருக்கிறது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேவஸ்தான நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.