வீட்டுக்குள் புகுந்த பாம்பை வெறும் கையால் பிடித்த நடிகர் சோனு சூட் வைரலாகும் வீடியோ..!
பயமின்றி கைகளால் பாம்பை பிடித்த நடிகர் சோனு சூட்
சாரைப்பாம்பை தனது கைகளால் பிடிக்கும் வீடியோவை நடிகர் சோனு சூட் வெளியிட்டுள்ளார்.
நடிகரும் சமூக சேவகருமான சோனு சூட் தனது வீட்டிற்கு வந்த சாரைப்பாம்பை தனது கைகளால் பிடித்து , தனது உதவியாளரிடம் கொடுத்து காட்டுக்குள் விடுமாறு உத்தரவிட்டார். இந்த வீடியோவை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த அவர், நச்சுத்தன்மையில்லாத சாரைப்பாம்பு அடிக்கடி குடியுருப்பு பகுதிகளுக்குள் வருவது இயல்பு எனவும் , அவ்வாறு பாம்பு தென்பட்டால் உடனடியாக நிபுணர்களைஅழைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.