அரபு நாட்டில் கதறி துடித்த தமிழர் - அங்கேயே சென்று நாதகவினர் செய்த தரமான சம்பவம்

Update: 2025-06-04 04:38 GMT

அரபு நாட்டில் வேலை எனக் கூறி, பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க வைத்து துன்புறுத்தப்பட்ட திருச்சியை சேர்ந்த நபர், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ஏஜெண்ட்கள் மூலம், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கவாஸ்கர் என்பவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அரபு நாட்டில் வேலை எனக் கூறி, அழைத்து செல்லப்பட்டு, சரியான உணவு, உடை உள்ளிட்டவை ஏதுமின்றி, வலுக்கட்டாயமாக பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க வைக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து, ஒரு நைஜீரியர் உதவியுடன் அவர் தனது குடும்பத்திற்கு தெரிவித்த தகவலின்படி, அவரது உறவினர்கள் அரபு நாட்டில் உள்ள நாம் தமிழர் கட்சியின் "செந்தமிழர் பாசறை" மூலமாக, கவாஸ்கரை மீட்க முயற்சி செய்தனர். அதன்படி, சட்டரீதியான நடவடிக்கைகள் ஏதும் கைக் கொடுக்காத சூழலில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளே, அந்த ஒட்டகப் பண்ணை உரிமையாளரிடம் விசா கட்டணமாக, ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து கவாஸ்கரை மீட்டுள்ளனர். பிறகு, மீட்கப்பட்ட கவாஸ்கரை, நாம் தமிழர் கட்சியினரே, அரபு நாட்டில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தனர். திருச்சிக்கு வந்த கவாஸ்கர் தனது மனைவி, குழந்தைகளைக் கண்டதும், கண்ணீர் விட்டு கதறி அழுதார். தொடர்ந்து பேசிய அவர், அங்கு 2 பெண்கள் தன்னை அடித்து சித்ரவதை செய்ததோடு, பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக கண்ணீர் மல்க கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்