உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியில் கேஸ் பைப் லைனில் இருந்து சிறுமி மீது மின்சாரம் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தெருவில் நடந்து சென்ற சிறுமி ஒருவர், அங்குள்ள சுவரை தொட்ட போது, கேஸ் பைப் லைன் வழியாக மின்சாரம் தாக்கியது. இதனால் அங்கிருந்து நகர முடியாமல் சிறுமி உயிருக்கு போராடினார்,..’
பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த சிறுமியின் தாயார், முயற்சி செய்தும் மின்சாரம் தாக்கியதால் காப்பாற்ற முடியாமல் பதறினார்.
அப்போது, துரிதமாக செயல்பட்ட மற்றொரு நபர், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.