50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பெற்றோர் பீதி
தலைநகர் டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெற்றோர் பீதியடைந்தனர். டெல்லி மாளவியா நகர், பிரசாத் நகரில் உள்ள பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் 5 ஆயிரம் டாலர் கேட்டு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். தகவலறிந்து வந்த வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள், பள்ளி வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக செயல்பட்டன. மேலும், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவந்த பெற்றோர், வெடிகுண்டு மிரட்டலால் பீதியடைந்தனர்.