சாகும்வரை `உண்ணாவிரதம் இருந்த’ 3 வயது குழந்தை - 10 நிமிடங்களில் பிரிந்த உயிர்
இந்தூரைச் சேர்ந்த மூன்று வயது வியானா ஜெயினுக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது... பெற்றோர் இருவரும் ஐடி நிபுணர்கள்... மருத்துவ சிகிச்சை மூலமும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், குருஜி ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஜெயின் மத நம்பிக்கையின்படி அக்குழந்தைக்கு சாந்தாரா வழங்கப்பட்டது. இறக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கும் முறைதான் சாந்தாரா. ஆனால் இவ்விரதம் துவங்கிய 10நிமிடங்களில் குழந்தையின் உயிர் பிரிந்தது. சாந்தாரா சபதம் எடுத்த மிக இளம் வயது நபர் என்ற பெருமையை வியானா பெற்றுள்ளார். ஆனாலும் வியானாவின் பெற்றோர் எடுத்த முடிவை இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.