திடீரென வலியில் அலறி துடித்த10 மாணவிகள் - பேரதிர்ச்சி காரணம்.. ஆடிப்போன பெற்றோர்
கேரளாவில் புகார் அளிக்க வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் மாணவிகள் மீது மாணவன் ஒருவர் பெப்பர் ஸ்ப்ரே அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் பைசன்வாலி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவர் மீது, மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் புகார் அளிக்க சென்றார். புகார் அளித்துவிட்டு பள்ளிக்கு அருகே நின்றிருந்த மாணவி மீது, மாணவன் பெப்பர் ஸ்பிரேவை அடித்தபோது அருகில் இருந்த பத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மீது பட்டுள்ளது. இதனால் மாணவிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சனை ஏற்பட்டதால், எட்டு மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.