தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை

Update: 2025-06-07 03:58 GMT

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஆயிரத்து 256 உயர் மருத்துவ சேவை முகாம்களை செயல்படுத்த 12.78 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் முதல், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, 388 வட்டாரங்களில் ஆயிரத்து 164 முகாம்களும், சென்னை மாநகராட்சி மற்றும் பிற மாநகராட்சிகளிலும் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக ரீதியில் பின்தங்கியவர் சிகிச்சைபெறும் வருகையில் இந்த முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்