`I'M BACK' - சீன சந்தைக்கு குறி.. புதிய மாடலை இறக்கிய Benz

Update: 2025-09-08 14:09 GMT

ஜெர்மனியைச் சேர்ந்த ஐரோப்பிய கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் புதிய மின்சார GLC SUV மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஓலா கேலேனியஸ்(Kaellenius) தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டின் 2வது காலாண்டில் மெர்சிடிஸ் பென்ஸின் சீன விற்பனை 19 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், மீண்டும் சீனாவில் இழந்த சந்தையை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மேலும் அமெரிக்கா தனது வாகன இறக்குமதி வரியை 27.5% இருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவது இந்நிறுவனத்திற்கு புதிய நம்பிக்கை கொடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்