"தெறி" ரீ-ரிலீஸ் தள்ளிப்போவதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்
விஜய்யின் தெறி படம் பொங்கலன்று ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதி தள்ளி வைக்கப்பட்டதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த 'தெறி' படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருந்தது.
பொங்கலுக்கு ஜனநாயகன் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, தெறி படத்தை ரீ - ரிலீஸ் செய்வதாக படத்தின் தயாரிப்பாளர் ஸகலைப்புலி எஸ் தாணு அறிவித்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்த நிலையில், தற்போது வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் கோரிக்கையின்படி, 'தெறி' திரைப்படத்தின் மறு வெளியீட்டை ஒத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக கலைப்புலி எஸ்.தாணு அறிவித்திருக்கிறார். எதனால் விஜய் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர்.