தன்னிடம் தவறாக நடந்துகொண்ட பான் இந்தியா ஹீரோவை, நடிகை பூஜா ஹெக்டே அடித்ததாக பரவி வரும் செய்தி போலியானது என, பூஜா ஹெக்டே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக உள்ள நடிகை பூஜா ஹெக்டே தமிழில் பீஸ்ட், ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, நடிகை பூஜா ஹெக்டே பேட்டி ஒன்றில் கூறியதாக வெளியான செய்தி ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், சில ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய பான் இந்திய திரைப்படத்தில் நடித்தபோது, அப்படத்தின் கதாநாயகன் அனுமதியில்லாமல் கேரவனுக்குள் நுழைந்து தன்னை தொட முயன்றதாகவும், அவரை தான் கன்னத்தில் அறைந்ததாகவும், பூஜா ஹெக்டே கூறியது போல் செய்தி வெளியானது. இந்நிலையில், இந்த செய்தி முற்றிலும் போலியானது என பூஜா ஹெக்டே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.