``பஸ் பிடித்து வந்தாவது... நிதி அமைச்சருக்கு நன்றி சொல்வோம்..'' - விஷால் | Vishal
அரசியல் பயணம் குறித்து டிசம்பர் மாதம் சொல்கிறேன் என நடிகர் விஷால் கூறியுள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நடிகர் விஷால், சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும், தற்காப்பு மிக முக்கியம் என்றும் கூறினார். மத்திய பட்ஜெட்டில் திரைப்படத்துறைக்கு நல்ல அறிவிப்புகள் வந்தால், பஸ் பிடித்து வந்தாவது நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவிப்போம் என்றும் விஷால் கூறினார்.