ஏ.ஆர்.ரகுமான் உடல்நிலை..? மருத்துவர்களிடம் விசாரித்த CM மு.க.ஸ்டாலின்

Update: 2025-03-16 12:05 GMT

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார். தனது தந்தை வெளிநாடு சென்று வந்ததால், உடலில் சற்று நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாகவும், அதற்காக சில வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நலமுடன் இருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானின் மகன் தெரிவித்துள்ளார். தனது தந்தை நலம்பெற பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து மருத்துவர்களை தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து கேட்டதாகவும், அவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், முதலமைச்சர் ஸ்டாலின், எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்