`கில்லி’ புகழ் ஆஷிஷ் வித்யார்த்தி.. கிடுகிடுவென பரவிய தகவல்

Update: 2026-01-05 04:23 GMT

சாலை விபத்தில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, மனைவி காயம்

தமிழில் கில்லி, தில் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற ஆஷிஷ் வித்யார்த்தி, தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தனது மனைவியுடன் அசாம் மாநிலம், கவுகாத்தியில் வசித்து வருகிறார். இந்நிலையில், சாலையை கடக்கும்போது வாகனம் மோதியதில் ஆஷிஷ் வித்யார்த்தியும், அவரது மனைவியும் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள ஆஷிஷ் வித்யார்த்தி, பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை எனவும், தன் மனைவிக்கு தான் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்