உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நடிகர் ஸ்ரீ, இரு மாதங்களுக்கு பிறகு சோசியல் மீடியாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதில், தனது முதல் ஆங்கில நாவலான "May Eye Come In" வெளியாகியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். நாவல் தற்போது Amazon இல் கிடைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீ உடல்நிலை தேறி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதோடு, புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டு இருப்பதற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.