மின்கட்டணத்தில் மாற்றம் - அமைச்சர் கொடுத்த முக்கிய UPDATE

Update: 2025-06-30 16:37 GMT

குறுந்தொழில், சிறுவணிகர்களுக்கும் மின்கட்டண உயர்வு இல்லை.குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறுவணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாட்டில் அனைத்து வீட்டு மின்இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறுவணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. இதன்மூலம் 2.83 கோடி மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள்.

மேலும் தற்போது உள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும்.

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்