மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.08.2025) | 1 PM Headlines | ThanthiTV
- தர்மபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் 70 ஆயிரத்து 427 பேருக்கு சுமார் 830 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....
- தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் மலிவான அரசியல் செய்கிறார்....தர்மபுரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு....
- மதுரையில் வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு...மாநாட்டுத் திடலில் 100 அடி உயரத்தில் பிரமாண்ட கொடிக்கம்பம் நடுவதற்கான பணிகள் தொடக்கம்.....
- பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் செயல்படுவார்....விழுப்புரத்தில் நடைபெற்ற பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்....
- அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை....சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பணம், நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்....
- நடப்பு நிதி ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்....
- தமிழ்நாட்டில் முதல் முறையாக விவசாயிகளுக்கு இ-கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயக் கடன்...தர்மபுரியில் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....
- வாக்காளர் பட்டியல் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு தொடர்பாக, இன்று விளக்கம் அளிக்கிறது தேர்தல் ஆணையம்..பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்...
- வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகாரில் 16 நாட்கள் பிரம்மாண்ட பேரணியை இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி...
- வடமேற்கு வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழத்த தாழ்வு பகுதி....காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 19ம் தேதி தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திரபகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்....