மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.08.2025) | 1 AM Headlines | ThanthiTV
- நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் பிரமாண்ட ஏற்பாடு...நாளை தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்ற உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்...
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நிறைவு..முதல்வரின் வெளிநாட்டு பயணம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது உள்பட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை...
- தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு...
- நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்....
- சுதந்திர தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு...
- தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சிகளாக ஆவடி, நாமக்கல் தேர்வுநாளை சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது விருது வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்...
- தமிழகத்தை சேர்ந்த 24 காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது...ஏடிஜிபி பால நாகதேவி, காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், ஐஜி லட்சுமி உள்ளிட்டோருக்கு விருது அறிவிப்பு...
- தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்...மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குபெண்கள் மீது வன்முறை கட்டவிழ்ப்பு என விமர்சனம்...
- சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் 530 பேர், மண்டபங்களில் அடைத்து வைப்பு...
- தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் ஒதுக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு...அனுமதி பெற்று போராட்டம் நடத்த எந்த தடையுமில்லை என நீதிபதி கருத்து...