செங்கோட்டையில் தங்க கலசம் திருட்டு - 3 பேர் கைது
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சமண மத விழாவில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கலசம் திருடப்பட்ட வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சமண மத துறவி வேடம் அணிந்து திருட்டில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டனர். பல கட்ட தேடுதலுக்கு பின், உத்தர பிரதேச மாநிலம் ஹப்பூரைச் சேர்ந்த பூஷன் வர்மாவை கைது செய்தனர். அவரிடம் இருந்த தங்க கலசம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.