காலை 9 மணி தலைப்பு செய்திகள் (02-06-2025) | 9AM Headlines | Today Headlines
- பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் திங்கள் தோறும் வழங்கப்படும் உப்புமாவுக்கு பதில் பொங்கல் - சாம்பார் சேர்ப்பு...
- கோடை விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்கள்....
- தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள் இன்றே வழங்கப்படும்.........
- தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்....
- 46 ஆண்டுகளாக பாமகவை இயக்கி வரும் தம்மை, பின்புலத்தில் இருந்து யாரும் இயக்கவில்லை என ராமதாஸ் விளக்கம்.....
- வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்வு.....
- ரஷ்யாவில் உக்ரைனை ஒட்டிய பிரியான்ஸ் (Bryansk) மற்றும் குர்ஸ்க் (Kursk) ஆகிய இரண்டு பகுதிகளில், ரயில்வே பாலங்கள் வெடி வைத்து தகர்ப்பு...
- அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு சற்று நேரத்தில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக புழல் சிறையில் இருந்து ஞானசேகரன் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்...