காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-04-24 00:45 GMT

பஹல்காம் தாக்குதலில் பின்னணியில் உள்ளவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்....

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்....


பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளின் புகைப்படத்தை வெளியிட்டு பாதுகாப்புப் படை தேடுதல் வேட்டை.....

உள்ளூரைச் சேர்ந்தோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்....


பஹல்காமில் உளவுத்துறை அதிகாரிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவும் தகவலுக்கு மறுப்பு...

மக்களை குறி வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உளவுத்துறை வட்டாரம் தகவல்...


பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்...

கூடுதல் விமானங்களை இயக்க விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் அறிவுறுத்தல்..


தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 2ம் தேதி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறப்பு.....

ஆரம்பப் பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் வெளியாகும் என தகவல்....


ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை....

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பம்....

Tags:    

மேலும் செய்திகள்