மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24.06.2025)

Update: 2025-06-24 13:18 GMT
  • போதைப்பொருள் விவகாரத்தில் பிரசாத் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்.....
  • போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நுங்கம்பாக்கம் போலீசார் சம்மன்...
  • போர் நிறுத்தம் அறிவித்த நிலையில் ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றச்சாட்டு...
  • ஈரான் உடனான மோதல் விவகாரத்தில் இஸ்ரேலின் செயல்பாடு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி...
  • மத்திய கிழக்கில் வான்வெளி திறக்கப்பட்டதை தொடர்ந்து ஏர் இந்தியா விமான சேவை படிப்படியாக தொடங்கும் என அறிவிப்பு...
  • விவசாயிகளின் துயரைப் போக்க, மாம்பழங்களை உரிய விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்.... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
  • ஜூலை 10ம் தேதிக்குள் பூத் கமிட்டியை முழுமையாக நிறைவு செய்ய அதிமுக நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்...
  • பெரியாரையும், அண்ணாவையும் பகைத்தவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்த வரலாறு இல்லை...
  • த.வெ.க சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் பேனர் வைக்கக் கூடாது...
  • தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு...
  • நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை குச்சியால் அடித்தே கொலை செய்த தந்தை
  • வரும் 27, 28 ஆகிய தேதிகளில் கோவை மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
  • ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள், நாளை மதியம் 12.01 மணிக்கு விண்வெளிக்கு பயணம்....
  • திருவண்ணாமலை மாவட்டம் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில், நான்கு கோடி ரூபாய் சொத்து பத்திரத்தை காணிக்கையாக போட்ட முன்னாள் ராணுவ வீரர்...
  • தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவியின் கணவர் லாரி மோதி உயிரிழப்பு...
  • சென்னையில் உள்ள ஏ.டி.எம்.களில் வடமாநில இளைஞர் நூதனமான முறையில் கொள்ளை...
  • ஆவடி அருகே ரயிலில் சாகசம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்..
Tags:    

மேலும் செய்திகள்