இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13-12-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-12-13 18:01 GMT

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறிய இரண்டு நபர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கிய விவகாரம்...

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, கர்நாடக பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா விளக்கம்...

கர்நாடக மாநிலம்

மைசூரூவில் உள்ள பாஜக எம்.பி., பிரதாப் சிம்ஹாவின் அலுவலகம் முற்றுகை...

மக்களவை சம்பவத்திற்கு பாஜக எம்.பி., அனுமதி சீட்டு வழங்கியதே காரணம் என காங்கிரஸ் கட்சியினர் முழக்கம்...

நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க மைசூருக்கு விரைந்தது காவல்துறை...

கைது செய்யப்பட்ட மனோரஞ்சன் வீட்டில் அவரது தந்தை தேவராஜிடம் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை...

நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டுவீசப்பட்ட விவகாரத்தில் இதுவரை 5 பேர் கைது...

சம்பவத்தில் தொடர்புடைய 5வது நபர் குருகிராமில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்