Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (01.06.2025)| 11 AM Headlines | Thanthi TV

Update: 2025-06-01 05:59 GMT
  • மதுரை மாவட்டம், உத்தங்குடியில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டம்...
  • விஜயகாந்த், குமரி அனந்தன், போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் மறைவுக்கு திமுக பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்...
  • திமுகவில் ஆசிரியர்கள், பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி உருவாக்கம்...
  • மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் 15 ஆயிரம் பேருக்கு தயாராகும் மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன் வறுவல் உள்ளிட்ட அசைவ உணவு வகைகள்...
  • மதுரை திமுக பொதுக்குழு நடைபெற உள்ளதை ஒட்டி புதிய பாடல் வெளியீடு...
  • மதுரைக்கு சொன்ன ஏதேனும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா? என அதிமுக கேள்வி...
  • வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் குறைப்பு...
  • கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்த மத்திய அரசு...
  • காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் வெளியே செல்லும்போது மாஸ்க் அணிவது அவசியம்...
  • கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு...
  • சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்...
  • கடலூர் அருகே வீட்டு தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த 126 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்...
  • திருச்சியில் தனியார் ஊழியர் வீட்டில் 21 சவரன் தங்க நகை திருடப்பட்ட சம்பவம்...
  • குற்றாலம் அருவிகளில் ஒரு வாரத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி...
  • டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மதராசி முகாம் அகற்றம்...


Tags:    

மேலும் செய்திகள்