காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23-08-2025) | 11AM Headlines | Thanthi TV

Update: 2025-08-23 05:57 GMT
  • பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்...வீடியோ வெளியிட்ட மாணவிகளின் பெற்றோர் நேரில் ஆஜராக கோவை பேரூர் மகளிர் போலீசார் சம்மன்...
  • பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தனியார் மருத்துவமனையில் அனுமதி...நெஞ்சுவலி காரணமாக சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...
  • எம்ஜிஆருக்கு இருந்ததை காட்டிலும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு அதிகரித்து வருகிறது...தமிழகத்தில் தங்களுக்கு யாருமே போட்டி கிடையாது எனவும், அமைச்சர் கே.என். நேரு பேட்டி...
  • கனமழை காரணமாக புழல், சோழவரம் ஏரிகளில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு...புழல் ஏரியில் 278 கன அடியாக இருந்த நீர்வரத்து, 880 கன அடியாக உயர்ந்தது...
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 24 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது...சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க ஏழு நாட்களுக்கு பிறகு அனுமதி...
  • சென்னை கண்ணகி நகரில், தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் தூய்மை பணியில் உயிரிழந்த சம்பவம்...தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிப்பு...
Tags:    

மேலும் செய்திகள்