மகளிர் உரிமை தொகை.. இந்த தேதியில் ரூ.1000 உங்கள் வங்கி கணக்கில் வந்து விழும்?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் தொடங்குகிறது. இத்திட்டத்தில் பயணாகளை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செப்டம்பர் 20-ந் தேதிக்குள், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ஆயிரம் ரூபாய் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 600 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 லட்சமாக உள்ளது. இது, ஒட்டுமொத்த மின் பயனாளர்களின் எண்ணிக்கையில் 5 விழுக்காடுதான் என்றும், மற்றவர்கள் 3 ஆயிரத்து 500 யூனிட் வரை பயன்படுத்துவோர் பட்டியலில் வந்து விடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயனாளிகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மின் பயன்பாட்டு அளவை ஒரு நிபந்தனையாக வைக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.