மின் கம்பங்களை அகற்றாமல் சாலை"அவசர தேவைக்கு கூட போக முடில" - மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில், மின் கம்பங்களை அகற்றாமல் பவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, மின் கம்பத்தில் மோதி விபத்துகள் ஏற்படுவதாகவும், அவசர தேவைக்கு ஆட்டோ கூட செல்ல முடியாத நிலையில் சாலை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், மின் கம்பங்களை உடனடியாக அகற்றி 100 மீட்டர் சாலை அமைக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.