உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் எது?.. முதலிடத்தைப் பிடித்த நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு

Update: 2023-04-17 10:42 GMT

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது...

IQ Air இன் கூற்றுப்படி, காத்மாண்டுவில் காற்றின் தரக் குறியீடு 190 ஐத் தாண்டியுள்ளது. அந்நகரை புகைமூட்டம் சூழ்ந்துள்ள நிலையில், உள்ளூர் மக்கள் கடும் அவதி அடைந்தனர்... இந்த வார தொடக்கத்தில், காத்மாண்டு மற்றும் நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிகரித்து வரும் மாசுபாட்டிற்குக் காரணம் காட்டுத் தீ மற்றும் விவசாய எச்சங்களை எரிப்பதே என நேபாள அரசாங்கம் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுமானப் பணிகளால் ஏற்படும் தூசி, பழைய, மோசமாகப் பராமரிக்கப்படும் வாகனங்களின் புகை, நிலக்கரி, செங்கல் சூளைகளின் புகை ஆகியவை காத்மாண்டு நகரை சூழ்ந்துள்ளது... இதனால் புற்றுநோய், பக்கவாதம், ஆஸ்துமா மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்