வினோதய சித்தம் தெலுங்கில் ரிலீசுக்கு தயார் - சமுத்திரக்கனி | Vinodhaya Sitham Remake In Telugu

Update: 2023-07-15 15:05 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி மற்றும் தெலுங்கு நடிகர் சாய்தரன் தேஜ் சுவாமி தரிசனம் செய்தனர்.

தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இருவரும், தமிழில் வெளியான வினோதய சித்தம் படத்தின் ரீமேக் தெலுங்கில் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளதாக கூறினர். திருப்பதியில் உள்ள ஒரு திரையரங்கில் பாடல் வெளியீட்டு விழா உள்ள நிலையில் சாமி தரிசனத்திற்காக வந்ததாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்