"விஜயகாந்த் பெயரை தான் சூட்ட வேண்டும்" - நடிகர் மீசை ராஜேந்திரன் கோரிக்கை
நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என நடிகர் மீசை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் சங்க புதிய கட்டிடத்தில், விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என, நடிகர் விஷால் அறிவித்திருந்தார். இதனிடையே, பாராட்டு விழாவுடன் நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என, மீசை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பல இயக்குநர்களை உருவாக்கியவர் விஜயகாந்த் எனவும், நடிகர் சங்க கடனை அடைத்தவர் எனவும் மீசை ராஜேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.